லே; ஜூலை 04, லடாக்கில் உள்ள கல்வான்பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்களைசீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீன தரப்பில் உயிர்சேதம் இரண்டு மடங்காக இருந்தும் அந்நாட்டு அரசு மவுனம் காக்கிறது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பிரதமர் மோடி, வெள்ளிக்கிழமை திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர். லேவில் உள்ள நிமு பகுதிக்கு சென்ற மோடி, ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் வந்த போது, வீரர்கள், "வந்தே மாதரம், பாரத்மாதாகிஜேஎன உற்சாகமாக கோஷம் எழுப்பினர். வீரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவதுநமது வீரர்களின் வலிமை இமயத்தைவிட உயர்ந்ததுபாறாங்கற்கள் போன்றமன உறுதியுடன் எல்லையை நமது வீரர்கள் காத்துவருகின்றனர். உங்களின் வீரம், நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது வீரர்களின் வீரம், தைரியம் மூலம் ஒட்டு மொத்த உலகத்திற்கும் இந்திய ராணுவம் முக்கியமான மற்றும் வலுவான தகவலை அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புராணுவ வீரர்களான உங்களின் கைகளில் தான் உள்ளதுவீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை ஒட்டுமொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான். உங்களின் வீரத்தால் மக்கள் பெருமை கொள்கின்றனர். உங்களின் தியாகம் மற்றும் வீரத்தால் தேசம் தலைநிமிர்ந்து நிற்கிறதுநமது எதிரிகளின் ஒவ்வொருதிட்டத்தையும் தவிடுபொடியாக்கி வருகிறோம்நமது நிலத்தை யாரும் ....3ம்பக்கக் தொடர்ச்சி....
இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் தேசம் தலைநிமிர்ந்து நிற்கிறது. கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்