மின் கட்டண விவகாரம் - தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்


சென்னை ;ஜூலை 22, தமிழக அரசுமின்கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக்கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்ட னர். திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், 16ம்தேதி காணொலி காட்சி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியதாக, மின்கட்டணத்தை பல மடங்கு வசூலிப்பதாக, அதனைக் கண்டித்து ஜூலை 21அன்றுவீடுகளின் முன்புகறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பிபோராடவேண்டும் என,முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செவ்வாய்கிழமை தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்களின் இல்லங்களின் முன்புகறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். கையில் கறுப்புக்கொடியை ஏந்தி பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார். தமிழக அரசைக்கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார்தன் கையில், 'ஷாக் அடிப்பது மின்சாரமா,மின்கட்டணமா?என எழுதப்பட்டவாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியிருந்தார். போராட்டத்தின்போதுரீடிங்' எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டுஊரடங்கு கால மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில்கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரியயூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத்தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், மத்தியப்பிரதேசம், கேரளா,மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா கால மின் கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும்மின் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும் என்றுசுமையை ஏற்றுவது கருணையற்ற போக்கு எனக்கூறி முழக்கங்களை எழுப்பினர். வேலூர் மாவட்டம் காட்டியில் உள்ள வீட்டில் துரைமுருகன் மற்றும் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை திமுக எம்.பி. கனிமொழி,சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அண்ணா அறிவாலயத்தில் தயாநிதி மாறனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அண்ணாசாலையிலுள்ள திமுக இளைஞர் அணி தலைமையகமான அன்பகத்தில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். திருவாரூரில் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் தடையை மீறிமின்வாரிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.