புதுடெல்லி: ஜூன் 30 பெட்ரோல், டீசல்விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அரசு விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்டீசல்விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. தற்போது கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தபோதும்உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியதால்தொடர்ந்து பெட்ரோல், டீசல்விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்டபல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும், விலை உயர்வைதிரும்பப்பெற உத்தரவிடக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படிதிங்கட்கிழமை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் மத்திய அரசு அலுவலகம் மன்ப போராட்டம் நடத்திய போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பெட்ரோல், டீசல்விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம்மக்களிடம் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் அரசுபிடுங்கிக்கொள்வதாக குற்றம்சாட்டி உள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமானசித்தராமையாதனது வீட்டில் இருந்து ஆதரவாளர்களுடன்சைக்கிளில் சென்றுமின்ஸ்க்சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். டெல்லியில்காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர்கள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்