தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில் 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் துவக்கியும் வைத்தார். அடிக்கல் நாட்டப்பட்ட 8 திட்டங்களில் 6 திட்டங்கள், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், துவக்கி வைக்கப்பட்ட 11 திட்டங்களில் 2 திட்டங்கள் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், 8 திட்டங்கள் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்களாகும்.
3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் துவக்கியும் வைத்தார்