பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி

சென்னை: ஜூலை 17 தமிழகத்தில் பிளஸ் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் (வெளியானதுஇதில் 97.12 சதவீதத்தினர் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை திடீரென வெளியிடப்பட்டதுபொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in <https:/tnresults.nic.in/>, dge1tn.nic.in <https://dge1tn.nic.in/>,dge2.tn.nic.in https://dge2.tn.nic.in/ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்வியாழக்கிழமை வெளியான தேர்வு முடிவுகளில் 92.சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவியர் 94.8சதவீதமும்மாணவர்கள் 89.41சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்அதாவது மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி விகிதம் 5.39 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் உள்ள 7,127 மேல்நிலைப்பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100 சதவீததேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்தது. 2வது மற்றும் 3வது இடங்கள் முறையே ஈரோடு (96.99 சதவீதம்), கோவை (96.39 சதவீதம்) உள்ளது. முக்கிய பாடங்களின் தேர்ச்சி விகிதம் இயற்பியல் 95.94 சதவீதம், வேதியியல் 95.82 சதவீதம், உயிரியல் 96.14 சதவீதம், கணிதம் 96.31சதவீதம்தாவரவியல் 93.95சதவீதம்விலங்கியல் 92.97 சதவீதம்கணினி அறிவியல் 99.51 சதவீதம்.. முன்னதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் 2020ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்மேல்நிலை முதலாம் ஆண்டு மார்ச் ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இணையத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்குவிண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். அரசுதேர்வுகள் இயக்ககள் அறிவிக்கும் நாட்களில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


 


மறுதேர்வு எழுதுபவர்களுக்கு ரிசல்ட்? பள்ளிகல்வித்துறை அறிவிப்பு -


தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள மறு தேர்வு எழுதும் பிளஸ்டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவு எப்போதுவெளியாகும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறுதேர்வு முடிந்த பின், அனைத்து பாடங்களுக்குமானதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. - விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மற்றும் வழிமுறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. | இதற்கிடையே, தமிழகத்தில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள பிளஸ்டூ மறுத்தேர்வு முடிந்தவுடன்விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் உறுதி அளித்துள்ளார்