தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும், அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி மூலமாக ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர்ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் ஜெ.கே.திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை: அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால்