குடிநீர் வழங்கும் ஊராட்சிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர்.


நாகை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வருகிற தண்ணீர், கீழ்வேளூர் டேங்கில் சேகரிக்கப்பட்டு பின்னர் பைப்லைன் மூலமாக கீழ்வேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட 38 பஞ் சாயத்துகளில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் அருகே உள்ளதேவூர் கடுவையாற்றின் குறுக்கே செல்லும் இந்த பைப் லைனில் கடந்த 1 வாரமாக ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்படாமல் தண்ணீர் வீணாகி வெளியாகி கொண்டு உள்ளதுசம்பந்த பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற அப்பகுதி மக்கள் இதுவரை அது சரி செய்யப்படாமல் உள்ளதால் குடிநீர் வழங்கும் ஊராட்சிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர்.