அந்தணர் முன்னேற்றம் கழகம் சார்பில் திருக்குவளை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு


நாகப்பட்டினம், ஜூன்.23 திருக்குவளை வட்டாட்சியரிடம் நாகை அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் 10 சதவீத இட ஒதுக்கீடுவழங்கக்கோரி மனுவானதுதிங்கள்கிழமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் முற்பட்ட வகுப்பினர் களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில்பல்வேறு மாநிலங்களும் 10% இட ஒதுக்கீடுகள் அமல்படுத்தி வருகிறதுஆனால் தற்பொழுது வரை தமிழகத்தில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லைஆகவே தமிழக அரசின் நடராஜன், மாவட்டச்செயளாலர் ஸ்ரீபுவனேஸ்வரன் இன்று அளித்தார்.உடன் மாவட்ட அமைப்பு செயளாலர் ஆவராணி ஸ்ரீ சுந்தர், மாவட்டபொருளாலர் ஸ்ரீ ஜெகன் தொண்டர் அணி செயளாலர் ஸ்ரீ சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.