சென்னை , ஜூன் 23 மதுரையில் இன்று உள்ளிரவு முதல்வரும் 30ந்தேதி தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதுதமிழகத்தில் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்வரும் 30ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுஇந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனையடுத்துகொரோனா பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வந்தது. மதுரையில் ஏற்கனவே கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்படும் என வணிக சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் வரும் 30ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆட்டோ உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுதிங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; * மத்திய மாநில அரசு சார்ந்த அலுவலக பணிகள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. * பொதுமக்கள் 1கி.மீ. தூரத்திற்குள் உள்ள கடைகளில் மட்டுமே அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். * தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை . உணவகங்களில் காலை6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. *ரேஷன்கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் * அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். * ஆட்டோ , டாக்சி வாகனங்களுக்கு அனுமதி இல்லை . அவரச மருத்துவ சேவைக்கு மட்டுமே அனுமதி. * 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. * பொதுவிநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசுமுழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
மேலும் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
தமிழகத்தில் மேலும் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3 மாவட்டங்களில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. - கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கமிமக வா நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.